Press "Enter" to skip to content

பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் கொள்ளை; வழக்கு விசாரணையில் ஊழியர்களே திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது: 4 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பொதுமக்களால் சூறையாடியபோது ரூ.18 லட்சம் கொள்ளை போனது தொடர்பான விசாரணையில் ஊழியர்களே திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர், அவர்களிடமிருந்து ரூ.1.30 லட்சத்தை பறிமுதல் செய்தனர். கடந்த 25-ம் தேதி பரனூர் சுங்கச்சாவடியில் அரசு பேருந்துக்கு சுங்கக் கட்டணம் வசூல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில், பொதுமக்கள் சுங்கச்சாவடியை சூறையாடியதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தின் போது ரூபாய் 18 லட்சம் கொள்ளைபோனதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

செங்கல்பட்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்து குல்தீப் சிங், விகாஸ் குப்தா, முத்து மற்றும் ஓட்டுநர் நாராயணன், நடத்துநர் பசும்பொன் ஆகியோரை கைது செய்தனர். இத்தாக்குதலின்போது சுங்கசாவடியில் இருந்து ரூ.18 லட்சம் காணாமல் போனதாக சிசிடிவி ஆதாரங்களுடன் சுங்கச்சாவடி மேலாளர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் சுங்கச்சாவடி ஊழியர்களே ஈடுபட்டதும், இன்சூரன்ஸ் பெற நாடகம் ஆடியதும் தெரியவந்தது. மேலும் இக்கொள்ளையில் ரூ. 2 லட்சம் மட்டுமே திருடு போனதும் தெரியவந்தது. இது தொடர்பாக பூபதிராஜா, மாரிமுத்து, சுரேஷ்குமார், ஜெயதீபன் ஆகியோரை போலீஸார் கைது செய்து, இவர்களிடமிருந்து ரூ.1. 30 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »