ஜெர்மனிக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கிரபெல்ட்: ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-ஜெர்மனி அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலாவது போட்டி கிரபெல்ட் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் தொடக்கம் முதலே இந்திய அணியினர் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்து ஜெர்மணி அணிக்கு கடும் நெருக்கடி […]
