Press "Enter" to skip to content

Posts published in “தமிழகம்”

சுட்டெரிக்கும் கோடை வெயிலால் தாகத்தில் தவிக்கும் பள்ளி மாணவர்களுக்கு நீர்ச்சத்து குறைவால் நோய்கள் உருவாகும் ஆபத்து : கண்டுகொள்ளுமா கல்வித்துறை?

திருவண்ணாமலை : தமிழகத்தில் வரலாறு காணாத வெயிலும், வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் வெயில் பாதிப்பும், குடிநீர் பிரச்னையும் கடுமையாக உள்ளது. அக்னி நட்சத்திர நாட்களில் இருந்த…

விபத்து ஏற்படும் அபாயம்: குமரியில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள்.. கண்டுெகாள்ளாத காவல் துறையினர்

மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தில் வாகனங்களில் அதிகளவு லோடு ஏற்றி செல்லுவது என்பது சர்வசாதாரணமாகி விட்டது. மணல், ஜல்லி, கருங்கற்கள், செங்கல், மரத்தடிகள் என பலவகையான லோடுகளையும் விதிமுறை மீறி அதிக பாரம் ஏற்றி கொண்டு…

30 சதவீதத்திற்கு குறைவாக மாணவர்கள் சேரும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு சிக்கல் : அரசு, தனியார் நிறுவனங்கள் திணறல்

நெல்லை : தமிழகத்தில் ஆசிரியர் பட்டய பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருவதால் இப்படிப்பில் சேர மாணவர்கள் தயங்குகின்றனர். இதனால் இந்த கல்வியாண்டில் 30 சதவீதத்திற்கு குறைவாக மாணவர்கள் சேரும் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.…

மடப்புரம்விலக்கு கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா: கரு.கருப்பையா தலைமையில் நாளை நடக்கிறது

மதுரை: திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம்விலக்கு விசாலாட்சி விநாயகர் கோயிலில் கரு.கருப்பையா தலைமையில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரையில் உள்ளது மடப்புரம்விலக்கு. இங்குள்ள பேருந்து…

கோவில்பட்டி அருகே கர்ப்பிணி மனைவி கொலை: மாமன் மகனை திருமணம் செய்வேன் என்றதால் கொன்றேன்… தற்கொலைக்கு முயன்ற கணவர் பரபரப்பு வாக்குமூலம்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற கணவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில், மாமன் மகனை திருமணம் செய்வேன் என்றதால் தீர்த்துக்கட்டியதாக தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம்…

குடிநீர் கிடைக்காமல் போராடும் நிலையில் பொன்னை ஆற்றில் குப்பைகள் மருத்துவ கழிவுகள் கொட்டும் அவலம் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவலம் : தமிழகம் முழுவதும் தற்போது குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது. மழை இல்லாததாலும், மழைநீரை முறையாக சேமித்து வைக்காததாலும், நீர்நிலைகள் மாயமாகி வருவதாலும் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பது பலரது குற்றச்சாட்டாகும். இந்நிலையில் தண்ணீர்…

மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் : கருவாட்டுடன் களி விருந்து

ஊத்தங்கரை : ஊத்தங்கரை அருகே மழை வேண்டி கழுதைகளுக்கு ஊர்மக்கள் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு களி விருந்து கொடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் வறட்சி ஏற்பட்டு ஏரிகள் வறண்டு…

தலைக்கவசம் அணியாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் : ஈரோட்டில் காவல் துறை கெடுபிடியால் வழிக்கு வரும் வாகன ஓட்டிகள்

ஈரோடு : ஈரோட்டில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் மீது வழக்கு மட்டுமல்லாது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால்…

குற்றாலத்தில் சாரல் ‘மிஸ்சிங்’ அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தென்காசி: குற்றாலத்தில் தொடர்ந்து சாரல் இல்லாத காரணத்தால் அருவிகளில் தண்ணீர் மிகவும் குறைவாக விழுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சாரல் சரிவர பெய்யவில்லை. நேற்று மதியம் வரை…

காற்றின் ஈரப்பதத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 7 லிட்டர் வரை தண்ணீர் தயாரிக்கும் எந்திரம்: திருச்சி ஜங்ஷனில் பயன்பாட்டுக்கு வந்தது

திருச்சி: காற்றின் ஈரப்பதத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 6 முதல் 7 லிட்டர் வரை தண்ணீர் தயாரிக்கும் எந்திரங்களை தொடர் வண்டிநிலையங்களில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்னை தற்போது தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது.…

திருவாழைக்காவல் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை

திருச்சி: திருவாழைக்காவல் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் உதவிப்பொறியாளர் தியாகராஜன் என்பவர் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டார். இரண்டு கடைகளில் மின்…

பிரபல கீழ் மகன் (ரவுடி) பினுவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

மாங்காடு: பிரபல கீழ் மகன் (ரவுடி) பினுவை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க ஸ்ரீபெரும்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழிப்பறி வழக்கில் ஆஜராகாத காரணத்தால் மாங்காடு காவல் துறையினர் கீழ் மகன் (ரவுடி) பினுவை…

பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடைமழை (கனமழை)

பெரம்பலூர்: பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. பெரம்பலூர் பழைய, புதிய பேருந்து நிலையம், 4 ரோடு, துறைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. Source:…

அரசு பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரங்கள் அமைப்பது தொடர்பான வழக்கில் அரசுக்கு அறிவிப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: அரசு பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரங்கள் அமைப்பது தொடர்பான வழக்கில் அரசுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கும் திட்டத்தை முறையாக அமல்படுத்தக்கோரி வழக்கு  தொடரப்பட்டது. இயந்திரம் வைக்கும்…

நீ என்ன புடுங்கிடுவியா… பயணியிடம் திமிராக பேசிய கண்டக்டர், டிரைவரின் லைசென்ஸ் ரத்து

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவடைக்கு செல்ல பஸ் ஸ்டாண்டு சென்றுள்ளார் சென்னையில் இருந்து சென்ற ஒருவர். பண்டாரவடை வழியாக செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். அந்த பயணியிடம் பண்டாரவடையில் பேருந்து…

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

திண்டுக்கல்: கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கொடைக்கானல் பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Source: Dinakaran

திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித்தை கைது செய்ய தடை: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித்தை வெள்ளிக்கிழமை வரை கைது செய்யக்கூடாது என உயர்நிதிமன்றம் கூறியுள்ளது. முன்ஜாமின்கோரி பா. ரஞ்சித் தாக்கல் செய்த மனுமீது நீதிபதி ராஜமாணிக்கம் விசாரணை மேற்கொண்டார். கைதுக்கு ஏற்கனவே விதித்திருந்த…

கோவை ஆர்.எஸ்.புரத்தில் OLA நிறுவன ஓட்டுநர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள OLA நிறுவனத்தின் ஓட்டுநர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகையை OLA நிர்வாகம் வழங்கவில்லை என குற்றசாட்டு வைத்தனர். Source: Dinakaran

மதுரை உசிலம்பட்டி அருகே ஆதார் அட்டையில் 120 வயது என குறிப்பிட்டுள்ளதால் கூலி தொழிலாளி பாதிப்பு

மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே ஆதார் அட்டையில் 120 வயது என குறிப்பிட்டுள்ளதால் கூலி தொழிலாளி பாதிக்கப்பட்டுள்ளார். பெரியசெம்மேட்டுபட்டியை சேர்ந்த மகாலிங்கத்தின் ஆதார் அட்டையில் பிறந்த தேதி 06-11-1900 என பதியப்பட்டுள்ளது. உசிலம்பட்டி தாலுகா…

மப்பேடு அருகே கீழச்சேரியில் தீ விபத்தில் 20 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

திருவள்ளூர்: மப்பேடு அருகே கீழச்சேரியில் தீ விபத்தில் 20 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன. குப்பையில் பிடித்த தீ வீடுகளுக்கும் பரவியதாக தகவல் அறிந்து தீயை அணைக்க 3 வாகனங்களில் வீரர்கள் போராடி தீயை…

திருவள்ளூரில் குப்பை கிடங்கில் பற்றிய தீயால் வீடுகள் சேதம்

திருவள்ளுவர்: திருவள்ளுவர் பாத்திமாபுரம் குப்பை கிடங்கில் பற்றிய தீயால் அருகில் உள்ள வீடுகளில் தீ பரவியது. சிலிண்டர் விதித்ததில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. Source: Dinakaran

வேட்பாளர் குறித்த விவரங்கள் இணையத்தில் இடம்பெறுமா ?: மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஆணை

மதுரை : உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யக் கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்…

சேலத்தில் ஒரே நிறுவனத்தின் 5 திரையரங்குகளுக்கு சீல்: கேளிக்கை வரியை செலுத்ததால் அதிகாரிகள் நடவடிக்கை

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் கேளிக்கை வரியை செலுத்தாத திரையரங்குகளுக்கு முத்திரை வைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள மல்ட்டிபிளக்ஸ் வளாகத்தில் ஏ.ஆர்.ஆர்.எஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 5 திரையரங்குகள் செயல்பட்டு வருகின்றன. ஒரே வளாகத்தில்…

காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளிக்கு விடப்பட்டிருந்த அரை நாள் விடுமுறையை ரத்து செய்தது நிர்வாகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளிக்கு விடப்பட்டிருந்த அரை நாள் விடுமுறையை நிர்வாகம் ரத்து செய்தது. கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் காஞ்சிபுரம் கத்ரி பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.…

குமரி அருகே 4 துறைமுகங்களில் தொடர் திருட்டு: கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த கோரிக்கை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் துறைமுகங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகளின் ஓட்டுவிசை (ஓட்டுவிசை (எஞ்ஜின்))கள் மற்றும் வலைகள் தொடர்ந்து திருடப்படுவதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சின்னமுட்டம், பெரியமுட்டம், குளச்சல், மற்றும் தேய்காய்ப்பட்டினம் ஆகிய நான்கு துறைமுகங்களில்…

சொட்டு நீர்பாசனம் அமைப்பதில் குளறுபடி… விரையமாகும் தண்ணீரால் கருகும் பயிர்கள்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் வேளாண்மைத் துறை மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க பைப்புகள் அமைப்பதில் குளறுபடியால் தண்ணீர் விரையமாகிறது. இதனால் விவசாயப் பயிர்களுக்கு தண்ணீர் போகாமல் கருகி வருகிறது. உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற…

அருப்புக்கோட்டை 9வது வார்டில் ரேஷன் பொருட்கள் வாங்க 2 கி.மீ பயணம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் 9வது வார்டில் உள்ள தேவா டெக்ஸ் காலனி பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக 2 கி.மீ தூரம் அலைகின்றனர். எனவே, பகுதி நேர ஞாயவிலைக்கடை அமைத்து, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும்…

நாமக்கல் அருகே கிராமங்களில் கடும் வறட்சி… உடைந்த குழாயில் தண்ணீரை பிடிக்கும் பெண்கள்

நாமக்கல்: நாமக்கல் அருகே உள்ள கிராமங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது.இதனால், பொதுமக்கள் குடிநீருக்கு தவியாய்,தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் அருகே முத்துகாப்பட்டியில் அனைத்து குடியிருப்புகளிலும் ஊராட்சி சார்பில், குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் கூட்டு குடிநீர்…

கோவையில் குடிநீர் வழங்காததை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் குடிநீர் வழங்காததை கண்டித்து, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக எம்எல்ஏ கார்த்திக் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகரின் பல வார்டு பகுதிகளுக்கு முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை…

நொய்யல் ஆற்றில் தொடரும் அவலம்… வெள்ளை நுரையுடன் ஓடும் சாயக்கழிவு நீர்

திருப்பூர்: திருப்பூர் காசிபாளையம் நொய்யல் ஆற்றில் நேற்று சாயக்கழிவுநீர் கலந்தோடியதால் வெள்ளை நுரையுடன் கழிவு நீர் காணப்பட்டது. திருப்பூர், நொய்யல் ஆற்றையொட்டி பல சாய ஆலைகளும், சுத்திகரிப்பு நிலையங்களும் இயங்கி வருகிறது. இதனால் நொய்யல்…

கார், டூவீலரில் பறக்கும் சிறுவர்கள் தொடர்கதையாகும் வாகன விபத்துகள்

காரைக்குடி: காரைக்குடி பகுதியில் டூவீலர்கள் மற்றும் கார்களில் பறக்கும் சிறுவர்களால் தினமும் வாகன விபத்து தொடர்கதையாகி வருகிறது. காரைக்குடி பகுதியில் பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரிகள் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. நகரபகுதியில்…

தர்மபுரி அருகே அதியமான்கோட்டை அரசு பள்ளி கழிவறையில் தண்ணீர் இல்லாததால் மாணவர்கள் அவதி

தர்மபுரி: தர்மபுரி அருகே அதியமான்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைக்கு, தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் விஷ ஜந்துகள் உள்ள புதர்களை பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 835 அரசு…

வேலூர் கோட்டை அகழியை தூர்வார 2வது நாளாக படகு மூலம் அகழியின் ஆழம் ஆய்வு

வேலூர்: வேலூர் கோட்டை அகழியை தூர்வாருவதற்கான பணியில் நேற்று 2வது நாளாக படகு மூலம் அகழியின் ஆழத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து நவீன இயந்திரங்களுடன் விரைவில் தூர்வாரும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள்…

‘காவல் துறை நடத்திய கொலைக்கு பதில் சொல்லுங்கள்’ மாவட்ட ஆட்சியர் முன் கைக்குழந்தையை போட்டு கணவர் மரணத்துக்கு நீதி கேட்ட மனைவி

மதுரை: அன்று பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டது போல், மதுரையில் மாவட்ட ஆட்சியர் முன் குழந்தையை போட்டபடி மனைவி, ‘‘காவலரால் என் கணவர் கொலையானதற்கு தகுந்த பதில் சொல்லுங்கள். நீதி, நியாயம் எங்கே’’ என…

தண்ணீர் பற்றாக்குறை எதிரொலி: காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் அரைநாள் விடுமுறை அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் தனியார் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பில் இருந்து 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரைநாள் மட்டும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கழிவறையை…

ஆசிரியை தாக்கியதில் பிளஸ் 2 மாணவர் படுகாயம்: காவல் துறையினர் விசாரணை

கன்னியாகுமரி: தக்கலை அருகே தனியார் பள்ளியில் ஆசிரியை தாக்கியதில் பிளஸ் 2 மாணவர் படுகாயம் அடைந்தார். பாடத்தை மனப்பாடம் செய்யாததால் மாணவனை ஆசிரியை தாக்கியதாக அளித்த புகாரை தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு…

கோவையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையில் போராட்டம்

கோவை: கோவையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடிநீர் பிரச்சனையை தீர்க்க…

கர்ணாவூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

திருவாரூர்: மன்னார்க்குடி அருகே கர்ணாவூரில் விவசாயிகள் தூக்குப் போடும் போராட்டம் நடத்துகின்றன. ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Source: Dinakaran

பழனி அருகே 7-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு

பழனி: பழனி அருகே சட்டப்பாறை பகுதியில் உள்ள மாந்தோப்பில் 7-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள காட்டுயானைகளை விரட்ட வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். Source: Dinakaran

மறைமலை நகர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது: காவல் துறையினர் நடவடிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்- செங்கல்பட்டு அடுத்த கீழ்க்கரனை மற்றும் மறைமலை நகர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை  காவல் துறையினர்கைது செய்யப்பட்டனர். மலைமீது பகுதியை சேர்ந்த ரமேஷ்,அரவிந்த்,கோபி,வெங்கடேசன் ஆகிய 4  பேர் கைதாகியுள்ளனர்.…

சேலம் நகரில் கேளிக்கை வரி செலுத்தாத 5 திரையரங்களுக்கு அதிகாரிகள் சீல்

சேலம்: சேலம் நகரில் கேளிக்கை வரி செலுத்தாத ஏ.ஆர்.ஆர்.எஸ். தியேட்டருக்கு அதிகாரிகள் முத்திரை வைத்தனர். மேலும் கேளிக்கை வரி செலுத்தாத 5 திரையரங்களுக்கு அதிகாரிகள் முத்திரை வைத்தனர். புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள…

மதுரை மாநகர காவல் ஆணையருக்கு மாநில உரிமைகள் ஆணையம் அறிவிப்பு

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையருக்கு மாநில உரிமைகள் ஆணையம் அறிவிப்பு அனுப்பியுள்ளது. மதுரையில் வாகனச் சோதனையின் போது காவல் துறை தாக்கி இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு காவல் ஆணையருக்கு அறிவிப்பு…

மதுரை மேலூர் அருகே இந்து அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து 62 கிராமங்களில் கடையடைப்பு

மதுரை: மதுரை மேலூர் அருகே இந்து அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து 62 கிராமங்களில் கடையடைக்கப்பட்டுள்ளது. வெள்ளலூர் ஏழை காத்த அம்மன், வல்லடிக்காரர் கோயில்களை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். Source: Dinakaran

புதுக்கோட்டையில் இறைவணக்க கூட்டத்தை திங்களை தவிர மற்ற நாட்களில் வெளியே நடத்த வேண்டாம்: வனஜா

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இறைவணக்க கூட்டத்தை திங்களை தவிர மற்ற நாட்களில் வெளியே நடத்த வேண்டாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா தெரிவித்துள்ளார். மேலும் திங்கள்கிழமை தவிர பிற நாட்களில் இறைவனக்க கூட்டத்தை…

2 நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பின் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீண்டும் மீன்பிடிப்பு

ராமேஸ்வரம்: 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பின் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். மேலும் ஏற்றுமதியாகும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தி 2 நாட்களாக போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. Source: Dinakaran

சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியல்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் 7வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் உள்ள சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. இதனால், வாகன  ஓட்டிகள் சாலை பள்ளங்களில் தடுமாறி…

நடிகர் சங்க தேர்தலை பற்றி கவலை இல்லை தேர்தலை வேறு ஒரு இடத்தில் நடத்தலாமா? விவரம் தெரிவிக்க நடிகர் சங்கத்துக்கு உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் சங்க தேர்தலை வேறு இடத்தில் நடத்துவது குறித்து தெரியப்படுத்துமாறு நடிகர் சங்கத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சங்க பொதுச்ெசயலாளர் விஷால்,   “சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர்…

எங்கும் பிரச்னை வரக்கூடாது என கல்வித்துறை கட்டளை சேலத்தில் பள்ளிகளுக்கு சொந்த செலவில் தண்ணீர் வாங்கும் ஹெச்.எம்கள்: குடிநீர் தட்டுப்பாட்டால் பரிதவிப்பு

சேலம்: தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் தண்ணீர் வாங்கி ஊற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், அனைத்து நீர்நிலைகளும் வறண்டன. இதனால்,…

தமிழக அரசு பாடநூலில் தேசிய கீதத்தில் பிழை: கல்வியாளர்கள் அதிர்ச்சி

ஆம்பூர்: தமிழக அரசு வழங்கிய பாட நூலில் தேசிய கீதத்தில் பிழை இருப்பதை கண்டு கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வி துறை சார்பாக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாட…

தமிழக அரசு பாடநூலில் தேசிய கீதத்தில் பிழை: கல்வியாளர்கள் அதிர்ச்சி

ஆம்பூர்: தமிழக அரசு வழங்கிய பாட நூலில் தேசிய கீதத்தில் பிழை இருப்பதை கண்டு கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வி துறை சார்பாக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாட…