Go to ...
RSS Feed

செய்திகள்

ஆசிரியர்களுக்கு சம்பள பிடிப்பு: அமைச்சர்!2 நிமிட வாசிப்புஆசிரியர்கள் எத்தனை நாட்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்களோ, அத்தனை நாட்களுக்கு சம்பளம் பிடித்தம…

ஆசிரியர்கள் எத்தனை நாட்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்களோ, அத்தனை நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று(ஜனவரி 14) மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்,கே.சி,கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அடுத்தாண்டு பள்ளி திறந்தவுடனே முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு

பாலியல் தொல்லை: இயக்குநர் மீது புகார்!5 நிமிட வாசிப்புதிரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிர…

திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. தற்போது பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் ராஜ்குமார் ஹிரானி மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சஞ்சு, முன்னாபாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியுள்ள ராஜ்குமார் ஹிரானி மீது பெண் உதவி இயக்குநர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். சஞ்சு படத்தில் பணியாற்றும் போது கடந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரை ஆறு மாத காலம் ஹிரானி அவரது உதவி

யாருடன் கூட்டணி? தமிழிசை3 நிமிட வாசிப்பு“திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத மோடியை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத…

“திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத மோடியை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக சார்பில் சென்னை தி.நகரிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (ஜனவரி 14) பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். செண்டை மேளம் முழங்க பொங்கல் வைக்கப்பட்டு, பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. வாள் சண்டை, மான் கராத்தே செய்த தமிழிசை, மேளம்

மகரஜோதி :சபரிமலை கோயில் நடை திறப்பு!2 நிமிட வாசிப்புகேரள மாநிலம் சபரிமலை பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகர ஜோதியை சரண கோஷம் எழுப்பி ஐயப்ப பக்தர்கள் தரிச…

கேரள மாநிலம் சபரிமலை பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகர ஜோதியை சரண கோஷம் எழுப்பி ஐயப்ப பக்தர்கள் பார்வை செய்தனர். சபரிமலை ஐய்யப்பன் கோயில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. இந்நிலையில், முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனத்துக்காக இன்று(ஜனவரி 14) மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டதையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சாமி ஐய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில் சாமி ஐய்யப்பன் ஜோதி வடிவில்

தனி மாவட்டம்: முதல்வருக்கு ஒரு மாதம் கெடு விதிக்கும் …4 நிமிட வாசிப்புகள்ளக்குறிச்சியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்படும் என்று கடந்த ஜ…

கள்ளக்குறிச்சியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்படும் என்று கடந்த ஜனவரி 8 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்தார். இன்று சேலத்தில் இருந்த முதல்வரை கள்ளக்குறிச்சி எம்.பி. காமராஜ் தலைமையில் பல்வேறு அமைப்பினர், தொழிலதிபர்கள் சந்தித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்கள். அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஆத்தூரில் சுமார் முன்னூறு பேருக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு, ஆத்தூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

போலீசாருக்கு பொங்கல் பதக்கம்!3 நிமிட வாசிப்புபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காவல் துறையினர் மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்க இன்று(ஜனவரி 14…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காவல் துறையினர் மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்க இன்று(ஜனவரி 14) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள், தங்கள் பணியில் வெளிப்படுத்துகின்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்தாண்டு பொங்கல் திருநாளான நாளை(ஜனவரி 15) காவல் துறை, ஆயுதப்படையில்

முதல்வர் பழனிசாமியை நீக்கி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்: ஆளுநரிடம் ஸ்டாலின் மனு

கோடநாடு காணொலி குறித்து முதல்வர் பழனிசாமி மீது நடவடிக்கை, நேர்மையான ஐஜி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டி ராஜ்பவனில் ஆளுநரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அவருடன் கனிமொழி, அ.ராசா, டி.ஆர். பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆளுநரிடம் வழங்கியுள்ள மனு விவரம்: 11.1.2019 அன்று பத்திரிக்கையாளர் மாத்யூ டெல்லியில் பத்திரிகை நிருபர்களை சந்தித்து, அதிர்ச்சி தரும் தகவல்

சபரிமலையில் காட்சியளித்த மகரஜோதி – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்

சபரிமலையில் இன்று மாலை மகரஜோதி வடிவில் காட்சியளித்த ஐய்யப்பனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சரண முழக்கங்களுடன் தரிசித்து பரவசமடைந்தனர். #LakhsofPilgrims #MakaraJyothi #SabarimalaMakaraJyothi திருவனந்தபுரம்: கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. நாள்தோறும் அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி பார்வை இன்று (திங்கட்கிழமை) மாலை நடந்தது.  மகரவிளக்கு பூஜையையொட்டி

கோடநாடு காணொலியில் பேசிய சயான், மனோஜ் சிறையில் அடைப்பு: அதிமுக தொழில்நுட்ப நிர்வாகி புகாரில் நடவடிக்கை

கோடநாடு சம்பவங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புபடுத்தி குற்றச்சாட்டுகளைக் கூறிய சயன், மனோஜ் ஆகிய இருவரும் அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி புகாரின் பேரில் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். மாலை நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கோடநாடு காவலாளி கொலை, கொள்ளை தொடர்பான பிரச்சினை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம்  தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் டெல்லியில் காணொலி ஒன்றை வெளியிட்டார்.  அது பலத்த சர்ச்சையை

கொடநாடு விவகாரத்தில் முதல்வர் உடனே பதவி விலக வேண்டும்- ஸ்டாலின் கோரிக்கை

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடைபெற வேண்டுமென்றால் முதல்வர் பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். #mkstalin #edappadipalanisamy #KodanadVideo சென்னை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின.  இதை மறைக்கவே ஜெயலலிதாவின் தேர்(கார்) டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில்

ரபேல் விவகாரம் தொடர்பான தீர்ப்பில் மறுபரிசீலனை – சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி முறையீடு

ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரம் தொடர்பாக முன்னர் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். #AAP #Rafaleverdict #AAPMP #Rafaleverdictreview புதுடெல்லி: ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு அளித்த விளக்கம் திருப்தியளிப்பதாகவும், போர் விமானங்களின் விலை நிர்ணயம் தொடர்பான  மத்திய அரசின் முடிவு தொடர்பாக விசாரிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்று கூறியும் மேற்படி பேரம்

சூதாடுவதற்காக தாய், மகள் கொலை செய்த உறவினர்: 4 ஆண்டுகளுக்குப் பின் கைது

சூதாடுவதற்காக தாய், மகளை கொலை செய்த உறவினர்  4 ஆண்டுகளுக்கு பின்பு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 22 சவரன் நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவருக்கு உதவியவரும் பிடிபட்டார். புதுச்சேரி வில்லியனூர் அரும்பார்த்தபுரம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சித்த மருத்துவரான தமிழ்செல்வி. இவர், அரும்பார்த்தபுரம் தொடர்வண்டித் துறை கேட் அருகே மருத்துவமனை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (57) என்பவர், சிகிச்சைக்காக தமிழ்செல்வியின் மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

‘‘இது தேர்தலுக்கு முந்தைய அரசியல்’’ – குற்றப்பத்திரிகை தாக்கல் குறித்து கண்ணய்யா குமார் விமர்சனம்

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தேசத்துரோக வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கண்ணய்யா குமார் விமர்சித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில், நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது தொடர்பான விவாத நிகழ்ச்சி நடந்தது. இதில், இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கண்ணய்யா குமார், மாணவர்கள் உமர்,

கோபம் வந்தால் உடையுங்கள்- சீனாவில் பிரத்யேக கடை

கோபத்தில் இருப்பவர்களின் மன அமைதிக்காக சீனாவில் இளைஞர் ஒருவர் பொருட்களை உடைக்கும் பிரத்யேக கடை ஒன்றை திறந்துள்ளார். #AngerRoom பெய்ஜிங்: கோபம் வந்தால் சிலருக்கு கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் தூக்கி எறிய வேண்டும் அல்லது உடைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்படி கோபத்தில் இருப்பவர்களை அமைதிப்படுத்த பொருட்களை உடைக்கும் கடை ஒன்று சீனாவில் திறக்கப்பட்டுள்ளது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கடைக்கு ‘ஆங்ரி ரூம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறையில் டிவி, கடிகாரம், தொலைபேசி

ஜேஎன்யு பல்கலை தேசத்துரோக வழக்கு: கண்ணய்யா குமார் மீது 1200 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் தீவிரவாதிகளை ஆதரித்து கோஷமிட்ட வழக்கில் முன்னாள் மாணவர் தலைவர் கண்ணய்யா குமார் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் 1,200 பக்க குற்றப்பத்திரிக்கையை காவல் துறையினர் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில், நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது தொடர்பான விவாத நிகழ்ச்சி நடந்தது. இதில், இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து

கிருஷ்ணகிரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 தலைமுறையினர் 12-வது ஆண்டாக ஒன்றுகூடினர்

கிருஷ்ணகிரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 தலைமுறையினர் 12-வது ஆண்டாக ஒன்று கூடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் அருகே சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு மரியப்பன் என்பவர் தனது மனைவி அந்தோணியம்மாளுடன் குடியேறினார். விவசாயம் செய்து வந்த இவர்களுக்கு 5 மகன்கள் இருந்தனர். வெங்காயக்காரர்கள் என்று அழைக்கப்படும் இவர்களது வம்சத்தினர், தற்போது சேலம், பெங்களூரு சென்னை, கிருஷ்ணகிரி உட்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தன்று

காதலனை முத்தமிட்டு ஐ லவ் யூ.. கட்டிப்பிடித்த பெண்.. பல்கலைக்கழகத்திலிருந்து டிஸ்மிஸ்

  ALLOW NOTIFICATIONS   oi-Hemavandhana | Published: Monday, January 14, 2019, 16:48 [IST] கெய்ரோ: தன் காதலனை இறுக்கமா கட்டிப்பிடித்த காரணத்துக்காக பல்கலைக்கழகத்தில் இருந்து அம்மாணவி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். எகிப்தில் போன மாசம் காணொளி ஒன்று இணையத்தில் வெளியானது. அந்த காணொளியில், இளைஞர் ஒருவர் கையில் பூங்கொத்துடன் வருகிறார். பிறகு திடீரென பெண் ஒருவர் முன் மண்டியிட்டு அப்பெண்ணுக்கு தன் காதலை தெரிவிக்கிறார். இதையடுத்து, அந்த பெண், தன் காதலனை இறுக்கமாக கட்டி

ஆயுள் தண்டனைக்கு எதிராக சஜ்ஜன் குமார் முறையீடு – சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் முறையீட்டு மனு தொடர்பாக சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு அனுப்பியுள்ளது. #SC #antiSikhriots #SajjanKumar புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கடந்த 31-10-1984  அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர்.

மத்திய பிரதேச துணை சபாநாயகரின் பாதுகாப்பு வாகனம் மீது பார வண்டி (லாரி) மோதியது- 4 பேர் பலி

மத்திய பிரதேச துணை சபாநாயகரின் பாதுகாப்புக்கு காவல் துறையினர் சென்ற வாகனம் மீது பார வண்டி (லாரி) மோதியதில் 3 காவல் துறையினர் மற்றும் டிரைவர் பலியாகினர். #MPAccident #MPDySpeaker பாலகாட்: மத்திய பிரதேச சட்டமன்ற துணை சபாநாயகரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ஹீனா கான்வரே, நேற்று இரவு தனது தொகுதியான லாஞ்சியில் இருந்து காரில் வந்துகொண்டிருந்தார். அவரது பாதுகாவலர்கள் தனி காரில் பின்னால் வந்துகொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் சேல்டேகா கிராமம் அருகே வந்தபோது, எதிரே ஒரு

தேசத்துரோக வழக்கு – கண்ணையா குமாருக்கு எதிராக கோர்ட்டில் 1,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகளை ஆதரித்து பேசிய கண்ணையா குமார் உள்ளிட்டோருக்கு எதிராக இன்று கோர்ட்டில் 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. #JNUSUpresident #KanhaiyaKumar புதுடெல்லி: பாராளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தினத்தை துக்கத்தினமாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சில மாணவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு கடைப்பிடித்தனர். அப்போது அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டதாக, பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார்,

தேமுதிகவுடன் கூட்டணியா?- தமிழிசை பதில்

கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை இந்தியா முழுதும் பார்க்கிறோம், ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை கூட்டணி கட்சிகள் ஏற்கவில்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “வரும் தேர்தல் பாஜகவின் வெற்றிக்கான அச்சாரமாக அமையும் வெற்றிக்கான அச்சாரத்தில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை அமையும். வரும் 18-ம் தேதி கூட்டணிக்கான பேச்சு வார்த்தையை தொடங்க உள்ளோம். பியூஷ் கோயல் பல மாநிலங்களுக்கு பொறுப்பாளராக இருந்து வெற்றியை தேடித்தந்தவர் அவருடன் பி.டி.ரவி அவர்

என்னிடம் சொல்லிவிட்டுதான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மும்பை சென்றனர்: குமாரசாமி விளக்கம்

என்னிடம் சொல்லிவிட்டுதான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மும்பை சென்றனர் என்று விளக்கம் அளித்திருக்கிறார் கர்நாடக முதல்வர் குமாரசாமி. கர்நாடகாவில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்திலிருந்தே இந்த கூட்டணி ஆட்சியை கலைக்க திட்டங்கள் தீட்டப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு எழுந்தது. இந்நிலையில் கர்நாடகாவில் ஆட்சியைக் கலைக்க நடக்கும் குதிரைபேரத்துக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூவர் இரையாகிவிட்டதாக தகவல் எழுந்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூவர் விமானத்தில் பாஜக நிர்வாகிகளுடன் மும்பை சென்றதாக வெளியான தகவலால் குமாரசாமி

மாயாவதிக்கு தலைவணங்கும் வரையில்தான் கூட்டணி நிலைக்கும்!- சமாஜ்வாதி எம்எல்ஏ போர்க்கொடி

மாயாவதி சொல்வதற்கு எல்லாம் இசைந்து அவருக்கு தலைவணங்கிப் போகும் வரைதான் பகுஜன் சமாஜ் – சமாஜ்வாதி கூட்டணி நிலைக்கும் என்று கூறியிருக்கிறார் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏ ஹரிஓம். வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆகியோர் கடந்த சனிக்கிழமை அறிவித்தனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் இவ்விரு கட்சிகளும் தலா 38

பொங்கல் பண்டிகை: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி உள்ளார். மகர சங்கராந்தி, பொங்கல், மகுபிகு உள்ளிட்ட பண்டிகைகள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆங்கிலம் மட்டுமின்றி அந்தந்த மொழிகளில் தனித்தனியாக தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.   தமிழில் அவர் பதிவிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், “பொங்கல் திருவிழா நன்னாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும்,

ஆட்சியில் இருந்தால் எங்கள் ஸ்டைலே வேறு: விஜயகாந்த் மகன் பிரபாகரன் பேச்சு

கடந்த 2011 தேர்தல்போல் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அனைவரும் விஜயகாந்தை நோக்கி வரும் நிலை ஏற்படும் என்று விஜயகாந்தின் மகன் பிரபாகரன் அரசியல் கூட்டத்தில் பேசினார். தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மகன் பிரபாகரன் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தருமபுரியில் நடந்த தேமுதிக கூட்டத்தில் அவருக்கு பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. கூட்டத்தில் பிரபாகரன் பேசியதாவது:   தர்மபுரிக்கு முதலில் பேச வந்தேன், ஆனால் கிருஷ்ணகிரியில் இருந்தே வரவேற்பு கொடுத்தார்கள். யாரெல்லாம் தேமுதிக ஓய்ந்துபோனது என்று சொன்னார்களோ அவர்கள் பதிலளிக்கும்

கும்பமேளா விழா பகுதியில் தீ விபத்து

உத்தரப் பிரதேசத்தில் கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் குடியிருப்பு வளாகத்தில் இன்று முற்பகல் (திங்கள் கிழமை) தீ விபத்து ஏற்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் நாளை கும்பமேளா திருவிழா தொடங்க உள்ளது. இது பன்னிரெண்டு  ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தியாவின் மாபெரும் விழாவாகும். கும்பமேளா திருவிழா நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள திகம்பர் அகதா பகுதியில் விழாவுக்கு வருகை தருவோர் தங்குவதற்கு குடியிருப்பு அமைக்கப்பட்டது. இக்குடியிருப்புப் பகுதியில்தான் இந்தத் தீவிபத்து ஏற்பட்டது. இவ்விழாவுக்கு பேரழிவு மேலாண்மையின் பொறுப்பு

பா.ஜனதாவுடன் கூட்டணியா? – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார். #OPS #BJP சென்னை: பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 75 நாட்களே உள்ளதால் அதை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் எதிர்கட்சியான தி.முக. காங்கிரசுடன் கூட்டணி வைக்கப்போவதாக அறிவித்துவிட்டது. இந்த கூட்டணியில் மார்க். கம்யூனிஸ்டு, இந்திய. கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைகின்றன. பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேரலாம் என்று கூறப்படுகிறது.

கணினிகள் கண்காணிப்பு விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

நாட்டில் உள்ள எந்த கணினியையும் ஊடுருவிப் பார்க்கவும், கண்காணிக்கவும், தகவல்களைத் திரட்டவும் 10 விசாரணை முகமைகளுக்கு அதிகாரம் அளித்த மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு அறிவிப்பு அனுப்ப உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 6 வாரங்களுக்குள் மத்தியஅரசு தங்களின் தரப்பு விளக்கத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. 2018-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில்,

ஓடும் தொடர் வண்டியில் இருந்து பயணிகள் ஏறி இறங்குவதைத் தடுக்க நீலநிற விளக்கு

ஓடும் தொடர் வண்டியில் இருந்து பயணிகள் ஏறி இறங்கும்போது விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க தொடர் வண்டிவண்டிகளில் நீல நிற எச்சரிக்கை விளக்கு பொருத்த மேற்கு தொடர்வண்டித் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிராவில் மின்சார ரயில்கள் என்பது முக்கியப் போக்குவரத்து அம்சம். அதுவும் மும்பையில் மின்சார தொடர் வண்டிபயணம் யாரும் தவிர்க்க இயலாத ஒன்று. அதேவேளையில் அந்த தொடர் வண்டிகளில் பயணிப்பவர்கள் உயிரைப் பணயம் வைத்து ஏறி இறங்குவதால் விபத்துகளும் தடுக்க முடியாதவை ஆகிவிட்டன. இதனைத்

நான் ஊதியத்தைத் தந்துவிடுகிறேன்; நீங்கள் வாக்குகளை திருப்பித் தாருங்கள்: அசாம் முதல்வருக்கு பாடகர் வேண்டுகோள்

“பாஜகவுக்கு வாக்களிக்கக் கோரி பாடிய பாடலுக்காக நான் பெற்ற ஊதியத்தைத் திருப்பி அளித்துவிடுகிறேன். ஆனால் நீங்கள் என் பாடல் மூலம் பெற்ற வாக்குகளை திரும்பித் தாருங்கள்” என்று அசாம் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பாடகர் ஜூபின் கார்க். ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் நாடுகளிலிருந்து 31, டிசம்பர் 2014-க்கு முன் இந்தியாவுக்குள் வந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மைப் பிரிவினருக்கு குடியுரிமைத் தகுதி வழங்குகிறதுது குடியுரிமைச் சட்டம். இதனை எதிர்த்து அசாம், திரிபுரா மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மக்களே.. முதல்ல.. அரசியல்வாதிகளை கொளுத்துங்க!!.சர்ச்சை பேச்சில் சிக்கிய உ.பி. அமைச்சர்

  ALLOW NOTIFICATIONS   oi-Keerthi Arunachalam | Published: Monday, January 14, 2019, 14:35 [IST] அலிகார்: இந்து,முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளை கொளுத்துங்கள் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் ஓம்பிரகாஷ் ராஜ்பார் தெரிவித்த கருத்து பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் சுகல்தேவ் பகுஜன் சமாஜ் என்ற கட்சி இடம்பெற்றிருக்கிறது. அதன் தலைவர் ராஜ்பார். ஆளும் கூட்டணியில் இருப்பதால் அவரும், அவர் பேசும் பேச்சும் எப்போதும் சர்ச்சையை ஏற்படுத்துவது

பிரதமர் பதவிக்கு தந்தையா? மாயாவதியா?- அகிலேஷ் யாதவுக்கு யோகி ஆதித்யநாத் கேள்வி

பிரதமர் பதவிக்கு தந்தை முலாயம் சிங் யாதவை நிறுத்துவாரா? அல்லது மாயாவதியை நிறுத்துவாரா? என்று அகிலேஷ் யாதவுக்கு உத்தரபிரதேச பா.ஜனதா முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பி உள்ளார். #AKileshYadav #YogiAdityanath லக்னோ: உத்தரபிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து உள்ளன. இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டணிக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ் “மாயாவதி பிரதமராக

அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு செல்லும் டிப்பர் பார வண்டி (லாரி)களால் கல்லக்குடி கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா? : நீதிமன்றம் கேள்வி

மதுரை : அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு செல்லும் டிப்பர் பார வண்டி (லாரி)களால் கல்லக்குடி கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அரியலூர் மாவட்ட வருவாய் அதிகாரி நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் கல்லக்குடி கிராமத்தைச் சேர்ந்த காந்தி என்பவர் தொடர்ந்த வழக்கு ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சிமெண்ட் ஆலைக்கு செல்லும் டிப்பர் பார வண்டி (லாரி)களால் ஏற்படும் தூசு மாசுவால் கல்லக்குடி

கோடநாடு விவகாரம்: ஆ.ராசாவைப் போல் பதவி விலகி முதல்வர் பழனிசாமி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்; கி.வீரமணி

கோடநாடு விவகாரத்தில் ஆ.ராசாவைப் போல் பதவி விலகி முதல்வர் பழனிசாமி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா பற்றியும், அதில் நடைபெற்ற தொடர் கொள்ளைகள், கொலைகள் பற்றியும், அதற்கு முழுக் காரணம் தற்போதுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்றும், கொலைபற்றி ‘தெகல்கா’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் மற்றும் சம்பவங்களில் ஈடுபடுத்தப்பட்ட நபர்களான

தனியார் கணிப்பொறிகளை உளவு பார்க்கும் நடவடிக்கை – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

தனியாருக்கு சொந்தமான கணிப்பொறிகளை உளவு பார்க்க அரசின் சில துறைகளுக்கு அதிகாரமளித்த நடவடிக்கையை எதிர்த்த வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று அறிவிப்பு அனுப்பியுள்ளது. #SC #SCnotice #PIL புதுடெல்லி: உளவு அமைப்புகளான உளவுத்துறை (ஐ.பி.), போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை பொருளாதார அமலாக்கத்துறை, மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம், வருவாய் உளவுத்துறை, சி.பி.ஐ., தேசிய விசாரணை முகமை, ‘ரா’ உளவு அமைப்பு, சிக்னல் உளவுத்துறை, டெல்லி காவல் துறை கமி‌ஷனர் அலுவலகம் ஆகிய 10 அமைப்புகளுக்கு

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி : 600க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அரசு அனுமதியுடன் முறையான பாதுகாப்பு மற்றும் வழிமுறைகள் பின்பற்றி இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு இன்று காலை தச்சங்குறிச்சி பகுதியில் தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மருத்துவர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, கோமாபுரம், மருதன்கோன் விடுதி, ஆதனக்கோட்டை, இலுப்பூர் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து 800 காளைகள் பதிவு செய்யப்பட்டு கலந்து கொண்டன. 600க்கும் மேற்பட்ட

மீண்டும் ஆபரேஷன் தாமரை? – மும்பையில் பாஜக தலைவர்களுடன் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்: கர்நாடக அரசியலில் பரபரப்பு

கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் மும்பையில் ஹோட்டல் ஒன்றில் பாஜக தலைவர்களுடன் தங்கி இருப்பதாக அம்மாநில அமைச்சர் சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கர்நாடகாவில் மஜத – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது முதலாகவே அமைச்சரவை பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் இரு கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர் களும் பதவி கேட்டு போர்க்கொடி தூக்குவதால் கர்நாடக அரசியல் களத்தில் அவ்வப்போது பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. கர்நாடகாவில் அண்மையில் 8

தமிழக அமைச்சரவை 18ம் தேதி கூடுகிறது- உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை

சென்னையில் வரும் 18-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. #GIM2019 #TNCabinet #TNGovt சென்னை: சென்னையில் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ள நிலையில், வரும் 18-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் அதற்கான பணிகள் குறித்து ஆலோசனை

ஜில்லோ ஜில்லு… நம்புங்க.. சத்தியமா இது நம்ம மூணாறுதான்.. எங்கு பார்த்தாலும் உறை பனி!

  ALLOW NOTIFICATIONS   oi-Hemavandhana | Published: Monday, January 14, 2019, 13:44 [IST] மூணாறு: கைகளால் ஐஸ் கட்டியை அள்ளி எடுக்கவும், உறைபனியால் மூழ்கி கிடக்கும் ஊரை பார்க்கவும் மக்கள் மூணாறில் குவிந்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் தற்போது குளிர் வாட்டி வருகிறது. இதில் மலைவாசஸ்தலங்கள் கேட்கவே வேண்டாம். எல்லா ஊர்களும் மைனஸ் டிகிரியில் போய் கொண்டிருக்கிறது. இந்த குளிருக்கு பயந்து ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதே இல்லை என்றால், மூணாறில்

பொங்கலுக்கு பிறகும் விடுபட்டவர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்கப்படும்- அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகை முடிந்தபின்னரும், விடுபட்டவர்களுக்கு பரிசுத் தொகை ரூ.1,000 வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். #PongalCashGift #MinisterKamaraj சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேசன் அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு பொருட்கள், ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 7-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் தினமும் 200, 300 குடும்ப அட்டைகள் வீதம் பொங்கல் பொருட்கள் மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டன. ஒரு வார காலமாக நடந்து வந்த வினியோகம் இன்றுடன்

வாரணாசி தொகுதியில் கெஜ்ரிவால் போட்டியில்லை – ஆம் ஆத்மி அறிவிப்பு

வாரணாசி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியில்லை என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. #AamAadmi #Kejriwal லக்னோ: டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியானது. இதை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய்சிங் இது தொடர்பாக கூறியதாவது:- கெஜ்ரிவால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் அவர் தீவிர கவனம் செலுத்துவார்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம் பகுதியில் 13 கண்காணிப்பு தொலைக்காட்சி கேமராக்கள் பொருத்தம்

மதுரை: ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம் பகுதியில் 13 கண்காணிப்பு தொலைக்காட்சி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Source: Dinakaran

எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும் – மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும். அதற்கான விவசாயம், இந்நாளில் தொடங்கட்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Pongal #MKStalin சென்னை: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து வருமாறு:- எத்தனையோ விழாக்கள் உண்டு. அவை மதத்துக்கு மதம், சாதிக்கு சாதி, வட்டாரத்துக்கு வட்டாரம், ஊருக்கு ஊர் மாறுபடும். வேறுபடும். ஆனால், ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் இருக்கும் ஒரே விழா இதுதான். உயர்வு தாழ்வற்ற சமத்துவ விழா. இலக்கியத்துக்கு மட்டுமல்ல

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தமிழில் பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். #Pongal2019 #PMModi புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தமிழில் பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது சமுதாயத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் பொங்கல் திருநாள் மேலும் கொண்டுவர மனமார பிரார்த்திக்கிறேன். தேசத்துக்கு உணவளிக்க கடுமையாக உழைத்திடும் விவசாயிகளுக்கு நாம் வணக்கம் செலுத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொங்கல் கொண்டாட்டம்- மெரினாவில், 10 ஆயிரம் காவல் துறை பாதுகாப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். #Pongal2019 #MarinaBeach சென்னை: தை முதல் நாளான நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் மாட்டுப் பொங்கலும், 17-ந் தேதி காணும் பொங்கலும் களை கட்டும். அன்றைய தினம் மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூடி பொழுதை கழிப்பார்கள். அன்று காலையிலேயே இதுபோன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும்

தகுதி நீக்க வழக்கு: பன்னீரின் பிறந்தநாள் மெசேஜ்!5 நிமிட வாசிப்புஇன்று ஜனவரி 14 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்த…

இன்று ஜனவரி 14 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் 68 ஆவது பிறந்தநாள். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றே பொங்கல் கொண்டாட சேலம் போய்விட்டார். பெரும்பாலான அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் நேற்றே சொந்த ஊருக்குப் போய்விட்டனர். ஆனால் ஓ.பன்னீர் தன் பிறந்தநாளன்று சென்னையில் சில முக்கிய நபர்களின் வாழ்த்துகளை வாங்குவதற்காகவே காத்திருந்து இன்று காலை 11 மணிக்கு மேல்தான் மதுரைக்கு விமானத்தில் புறப்பட்டுப் போகிறார். அதிகாலை முதலே அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள்

எடப்பாடி பழனிசாமி சிறை செல்வார்: மேத்யூ சாமுவேல்4 நிமிட வாசிப்பு“எடப்பாடி பழனிசாமி 5 பேரை கொலை செய்தவர், அவர் சிறைசெல்வது உறுதி” என்று தெகல்ஹா முன்னாள…

“எடப்பாடி பழனிசாமி 5 பேரை கொலை செய்தவர், அவர் சிறைசெல்வது உறுதி” என்று தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் தெரிவித்துள்ளார். கொடநாடு கொள்ளை, அதுசம்பந்தமாக அடுத்தடுத்து நடந்த கொலைகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குற்றம்சாட்டி ஆவணப்படம் ஒன்றை தெகல்ஹா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் டெல்லியில் கடந்த 11ஆம் தேதி வெளியிட்டார். இதுதொடர்பாக அதிமுக தரப்பு அளித்த புகாரின் பேரில் மேத்யூ சாமுவேல், அதில் பேட்டியளித்த சயன், மனோஜ் ஆகியோர் மீது மத்திய

பேட்ட – விஸ்வாசம்: ஆறு கோடி வித்தியாசம்!8 நிமிட வாசிப்புதமிழகத்தில் அரசியல் களம் அனலாய் இருக்கிறது, கொலை கொள்ளைக்கு காரணமானவர் என்று மாநிலத்தை ஆளும் …

தமிழ் திரைப்பட 365: பகுதி – 14 இராமானுஜம் தமிழகத்தில் அரசியல் களம் அனலாய் இருக்கிறது, கொலை கொள்ளைக்கு காரணமானவர் என்று மாநிலத்தை ஆளும் முதல்வர் மீது டெல்லியில் இருந்து புகார் பட்டியல் வாசிக்கப்பட்டிருக்கிறது. கூப்பிடு தூரத்தில் இருந்த நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்ய முடியாமல் தனிப்படை அமைத்து தேடிக் கொண்டிருப்பதாக கூறியது தமிழக காவல் துறை. தமிழக முதல்வருக்கு எதிராகப் புகார் பட்டியல் வாசித்தவர்களை 48 மணி நேரத்தில் டெல்லியில் கைது செய்திருக்கிறது திறமை மிக்க

போகி பண்டிகை : விமானங்கள் ரத்து!2 நிமிட வாசிப்புசென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டத்தினால் ஏற்பட்ட புகை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டத்தினால் ஏற்பட்ட புகை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பொங்கலுக்கு முந்தைய நாளான இன்று(ஜனவரி 14) தமிழகம் முழுவதும் போகி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தில் வீட்டைச் சுத்தம் செய்து, வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்கள்,துணிகளை தீயிட்டுக் கொளுத்துவது வழக்கம். இன்று அதிகாலையிலேயே சிறுவர்கள் தேவையில்லாத பொருட்களை எரித்து, மேளம் அடித்துப் போகி பண்டிகையைக் கொண்டாடினர். இந்நிலையில்,பனிமூட்டம் மற்றும் புகை காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விமான சேவையும்

கொடநாடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!2 நிமிட வாசிப்புகொடநாடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் ட்ராபிக் ராமசாமி வழக்கு …

கொடநாடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் ட்ராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். கொடநாடு கொள்ளை மற்றும் கொலையில் முதல்வரை சம்பந்தப்படுத்தி குற்றம் சாட்டியிருந்தார் தெகல்ஹா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல். இதுதொடர்பாக முதல்வருக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ள எதிர்க்கட்சிகள், இந்த விவகாரத்தை மாநில காவல் துறை விசாரிக்கக் கூடாது எனவும் சிபிஐதான் விசாரிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளன. மேலும், சிபிஐ விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்று முதல்வர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேட்டியளித்த

Older Posts›› ‹‹Newer Posts