Press "Enter" to skip to content

Posts published by “Sneha Suresh”

விஜய் வீட்டில் நடந்த சோதனை முதல்… அமைச்சர் மீது காவல்துறையில் புகார் அளித்த சிறுவன் வரை..! #TopNews

நடிகர் விஜய் வீட்டில் 23 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு. விஜய் செய்துள்ள முதலீடுகள் பற்றி ஆய்வு நடத்தியதாக வருமான வரித்துறை அறிக்கை. பிகில் பட வசூல் தொடர்பான…

நடிகர் விஜய் வழக்கு தொடரலாம்: சுப்ரமணியன் சுவாமி

படப்பிடிப்பில் இருந்து அழைத்து வந்து வருமான வரித்துறை சோதனை நடத்தியது சரியில்லை என்றால், விஜய் வழக்கு தொடரலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார். ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ்…

விவசாயி தவறவிட்ட ரூ.74,000 பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்..!

ஆட்டோவில் தவறவிட்ட 74 ஆயிரம் ரூபாய் பணத்தை பத்திரமாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தேனியில் விவசாயி ஒருவர் 74 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வைப்புத் தொகை பத்திரத்தை ஆட்டோவில்…

“இளைஞர்களின் நம்பிக்கை நாயகனான விஜய் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சக்கூடாது”- கே.எஸ்.அழகிரி

வருமான வரித்துறை சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு இளைஞர்களின்‌ நம்பிக்கை நாயகனான நடிகர் விஜய் அஞ்சக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். வருமான வரித்துறையினர் நீலாங்கரை அருகே உள்ள விஜய் வீட்டில்…

‘பிகில்’ தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 38 இடங்களில் சோதனை.. கணக்கில் வராத ரூ.300 கோடி கண்டுபிடிப்பு

சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.300 கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர், தயாரிப்பாளர்,…

சிட்டுக் குருவிகளை காப்பாற்றும் வடசென்னை பக்‌ஷி ராஜன்.

சிட்டுக் குருவிகளுக்கு கூடு கட்டித் தருகிறார் வடசென்னையைச் சேர்ந்த குருவி கணேசன். ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வரும் பக்‌ஷி ராஜனை நினைவு படுத்துகிறார் வடசென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். கணேசன் என்ற அந்த…

‘திண்டுக்கல் சீனிவாசன் மட்டுமல்ல.. பல அமைச்சர்கள் இப்படிதான் இருக்கிறார்கள்’ – ஸ்டாலின்

அதிமுகவில் உள்ள பல அமைச்சர்கள் இப்படிதான் இருக்கிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் நடந்த யானைகள் முகாம் நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். யானைகள்…

கட்டுக்கட்டாக ரூ.500, ரூ.2000 நோட்டுகள் : பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம்!

பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் அலுவலகம், உரிமையாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல், அப்படத்தின்…

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : தலைமறைவாக இருந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சரண்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமாரின் மோசடிக்கரம் பள்ளிக்கல்வித்துறை வரை நீண்டிருப்பதாக…

சிறுவனை செருப்பு கழற்ற சொன்னதில் தவறு இருப்பதாக நினைக்கவில்லை’ – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

பேரன் மாதிரி இருந்ததால் சிறுவனை அழைத்து செருப்பை கழற்றச் சொன்னதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் நடந்த யானைகள் முகாம் நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்…

பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் ரூ.65 கோடி பறிமுதல்

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் இருந்து ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் அலுவலகம், உரிமையாளர் வீடு…

சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற வைத்த அமைச்சர் – காணொளி!

சிறுவனை அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது செருப்பை கழற்ற சொன்னதால் சர்ச்சை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் நடந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். யானைகள் முகாமை தொடங்கி வைத்த…

‘விநியோகஸ்தர்கள் மிரட்டுகிறார்கள்’ – பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி முருகதாஸ் மனு

தர்பார் பட விவகாரத்தில் விநியோகஸ்தர்கள் தன்னை மிரட்டுவதால் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு…

தண்ணீர் தொட்டியில் உயிரிழந்து கிடந்த ஒரு வயது குழந்தை: தந்தை மீது சந்தேகம்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் ஒரு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் உயிரிழந்து கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த அமல்ராஜ் – சுஷ்மிதா தம்பதியின் ஒரு…

TopNews | விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை; நியூசிலாந்து வெற்றி… சில முக்கியச் செய்திகள்!

பிகில் பட சம்பளம் தொடர்பாக நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் இரவு முழுவதும் சோதனை. படத் தயாரிப்பாளர், பைனான்ஸியரின் வீடுகள், அலுவலகங்களில் 25 கோடி ரூபாய் சிக்கியதாகத் தகவல் டி.என்.பி.எஸ்.சி-யைத் தொடர்ந்து ஆசிரியர்…

சிஏஏவுக்கு எதிராக ராப் பாடல் பாடிய இளைஞர் – நேரில் அழைத்து பாராட்டிய ஸ்டாலின்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ராப் பாடல் பாடிய அறிவு என்ற இளைஞரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்…

நகையை திருடியதாக கூறியதால் வாக்குவாதம் – நண்பரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

கொரட்டூரில் நண்பரை குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, நெய்வயல் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கிய சுபாஷ்(24) என்பவரும், வாணியம்பாடியை சேர்ந்த பாபு(25)…

முதியவர்களை கொல்லும் சைக்கோ கொலையாளி – கண்காணிப்பு தொலைக்காட்சி காட்சி மூலம் விசாரணை தீவிரம்

சேலத்தில் ஆதரவற்ற முதியவர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஆதரவற்ற முதியவர்கள் இரண்டு பேர் அடுத்தடுத்த நாளில் கொலை செய்யப்பட்ட…

ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் பாலியல் தொழில்? – காவல் துறையினர் விசாரணை

கரூரில் கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் செங்குந்தபுரத்தில் கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்று இயங்கி…

இன்னும் சில நாட்களில் பிரசவம் : விபத்தில் கர்ப்பிணி உயிரிழந்த சோகம்

பழனி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது‌. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள இரவிமங்கலத்தைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன்(30). கூலித்…

ஏஜிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் வருமான வரிச் சோதனை : ரூ25 கோடி பறிமுதல்

ஏஜிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் ரூ25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.…

‘பாஜகவுக்கு பல்லக்கு தூக்க ரஜினி தயாராகிவிட்டார்’ – சிஏஏ குறித்த கருத்துக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு..!

சிஏஏவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பேசியது குறித்து பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் “சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பிரச்னை என பீதி கிளப்பப்பட்டுள்ளது. சுய லாபத்திற்காக…

தமிழில் ஒலித்த மந்திரம்.. வட்டமிட்ட கருடன்… தஞ்சை கோயில் குடமுழுக்கு கோலாகலம்

தஞ்சை பெரிய கோயிலில் வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது. தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது. தமிழ், சமஸ்கிருதம் என இருமொழிகளிலும் நடைபெற்ற குடமுழுக்கை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு…

தமிழ் மந்திரம் ஒலிக்க கோலாகலமாக நடைபெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு!

தஞ்சை பெரிய கோயிலில் வெகு விமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது. தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கிற்கான யாகசாலை பூஜைகள் ஒன்றாம் தேதி தொடங்கியது. தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடைமுறைகள் நடந்த நிலையில்…

கோலாகலமாக நடைபெறும் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு

தமிழகத்தின் தஞ்சைத் தரணியில் உள்ள பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா நிகழ்வுகள் வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கிற்கான பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. யாகசாலை பூஜைகள்…

நடிகர் ரஜினிக்கு அதிகாரப்பூர்வமான அழைப்பு முதல் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி வரை..! #TopNews

தஞ்சை பெரிய கோயிலில் கோலாகலமாக தொடங்கியது குடமுழுக்கு விழா நிகழ்வுகள். தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடைமுறைகள். 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து. பழைய நடைமுறையே தொடரும்…

அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சோகம்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளை மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் மேல்வாலை கிராமத்தை சேர்ந்தவர்…

பிரசவ வார்டில் நூலகம் – வியக்க வைக்கும் அரசு மருத்துவமனை

ஒரு அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் நூலகத்தை அமைத்து மக்களின் வாசிப்பு பழக்கத்திற்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை…

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – கடந்து வந்த மன உளைச்சல்களும், கல்வியாளர்களின் கருத்துக்களும்…!

5-வது மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2020-2021 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள்,…

குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஆர்பரித்து ஓடும் குடிநீர் – சோப்பு போட்டு குளித்து கண்டனம்

திருப்பூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதை கண்டிக்கும் விதமாக ஒருவர் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தத்தில் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர்…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிப்.25-ல் நேரில் ஆஜராக ரஜினிக்கு அதிகாரப்பூர்வமான அழைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 25ஆம் தேதி தூத்துக்குடி கடற்கரை சாலையில்…

குரூப்2 ஏ தேர்வு முறைகேடு: தலைமறைவாக இருந்த காவலர் சித்தாண்டி கைது

குரூப்2 ஏ தேர்வு முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்த ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். குரூப்2 ஏ தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்ததாக…

ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வாங்க ஏன் கட்டுப்பாடுகள் கொண்டுவரக் கூடாது?: உயர்நீதிமன்றம்

தனி நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்க கட்டுப்பாடுகள் கொண்டுவர முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தனி நபர் ஒன்றுக்கு மேற்பட்ட…

5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து – தமிழக அரசு

5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு சமீபத்தில்…

பங்குகளை விற்க அரசு முடிவு.. எல்ஐசி ஊழியர்கள், கொள்கைதாரர்கள் பயப்படுவது ஏன்..?

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் விற்கப்படும் என்ற அறிவிப்பு நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள‌ பொதுத்துறை நிறுவனங்களில் பொன்முட்டையிடும் வாத்தாக திகழ்கிறது எல்ஐசி. இக்கட்டான தருணங்களில் அரசின் நிதித் தேவைகளை…

விழாக்கோலம் பூண்ட தஞ்சை முதல் இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி வரை..! #TopNews

கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு. மாநில பேரிடராக அறிவித்தார் முதலமைச்சர் பினராயி விஜயன். சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட 406 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய அரசு…

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு – மனைவிக்காக உதவி செய்த காவலர் கைது

குரூப் 2 ஏ தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட காவலர் முத்துக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குரூப் 2 ஏ தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்ததாக புகார்…

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவரிடம் கூடுதல் தொகை கேட்ட காவலர் – காணொளி

மதுரையில் குடித்துவிட்டு இருசக்கரவாகனம் ஓட்டிச் சென்ற நபருக்கு, போக்குவரத்து தலைமைக் காவலர் ஒருவர் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், 500 ரூபாய் கூடுதலாக வேண்டுமென கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில்…

மனைவி தற்கொலையால் சோகம்: 2 குழந்தைகளுடன் கணவர் தற்கொலை

ராணிப்பேட்டை அருகே 2 குழந்தைகளுடன் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாலாஜாபேட்டை ரயில் நிலையம் அருகே வெங்கடேசன்(30) என்பவர் தனது இரு குழந்தைகளான சஞ்சனா ஸ்ரீ (2),…

சிஏஏவுக்கு எதிர்ப்பு : அதிமுக பிரமுகரை தாக்கிய பாஜகவினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற பாஜ‌க பொதுக்கூட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக முழக்கமிட்ட அதிமுக பிரமுகர் தாக்கப்பட்டார்‌. குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களும் பேரணிகளும் நடத்தி வருகின்றனர்.…

குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி? – விசாரணையில் அம்பலம்

குரூப் 2 ஏ தேர்வில் விடைத்தாளை மாற்றி இணைத்து மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குரூப் 2 ஏ தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து…

“தமிழகத்தை ரஜினி ஆள ஒருபோதும் அனுமதிக்க முடியாது” – இயக்குநர் பாரதிராஜா

தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வருவது உறுதி எனவும் 2021 சட்டப்பேரவை தேர்தலை சந்திப்போம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் ஏற்கெனவே கூறியுள்ளார்.…

சென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – 4 பேருக்கு சாகும்வரை ஆயுள்

சென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படட் வழக்கில், குற்றவாளிகள் மீதான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.…

மரக்கன்று வளர்ப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு ஈஷா பசுமை பள்ளி விருது

மரக்கன்று வளர்ப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 35 பள்ளிகளுக்கு ஈஷா பசுமை பள்ளி விருதுகளை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வழங்கினார். ஈஷா பசுமை இயக்கம் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட…

சென்னை சிறுமி வன்கொடுமை வழக்கு: தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது. சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இது…

ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி சடலமாக மீட்பு!

விருதுநகர் அருகே ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வேண்டுராயபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் கருப்பசாமி-ராஜலட்சுமி தம்பதி. இவர்களது 9 வயது மகள் வசந்த குருலட்சுமி, அதேபகுதியில்…

அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள் முதல் வரலாறு படைத்த இந்திய அணி வரை..! #TopNews

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வந்த 12 பேர் மட்டும் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பதாக விளக்கம். கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்…

“தஞ்சை கோயில் குடமுழுக்கு விழாவுக்கு கூடுதலாக 250 பேருந்துகள் தயார்” – டிஎன்எஸ்டிசி

தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவிற்காக, கூடுதலாக 250 பேருந்துகளை இயக்க தயாராக உள்ளதாக, அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…

5 தலைமுறையினருடன் 105 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி

மதுரை அருகே 105 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் மூதாட்டி ஒருவர், தன் வழிவந்த 5 தலைமுறையினருடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடினார். மேலூர் அருகே சிலோன் காலனியைச் சேர்ந்தவர் வீரையா என்பவரின் மனைவி…

“நுழைவுத் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வேண்டும்” – ஓபிஎஸ் கோரிக்கை

நாட்டு மக்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் விதமாக மத்திய நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளதாகத் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை வரவேற்பதாகக்…